கேரளாவில் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் மேடையில் பேசிக்கொண்டிருந்த பொழுது நகர காவல் ஆணையர் மயங்கி சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவின் 76வது குடியரசு தின விழாவானது நாடெங்கும் மாநிலங்கள் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கேரளாவின் திருவனந்தபுரத்தை அடுத்துள்ள செண்ட்ரல் ஸ்டேடியத்தில் அம்மாநில ஆளுநர் கொடியேற்றிவைத்து, உரையாற்றி வந்தார்.
அச்சமயத்தில் அவருக்கு அருகில் நின்றுக்கொண்டிருந்த நகர போலிஸ் கமிஷனர் தாம்சன் ஜோஸ் என்பவர், திடீரென்று மயங்கிவிழுந்து சரிந்தார். உடனடியாக அருகில் நின்ற சக ஊழியர்கள், தாம்சன் ஜோஸை மீட்டு ஆம்புலன்ஸில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.