இந்தியா

கேரள விமான விபத்து: மீட்புப் பணிகளில் ஈடுபடுவோர் தனிமைப்படுத்தப்படுவர் எனத் தகவல்

கேரள விமான விபத்து: மீட்புப் பணிகளில் ஈடுபடுவோர் தனிமைப்படுத்தப்படுவர் எனத் தகவல்

webteam

துபாயில் இருந்து 191 பேருடன் கேரளாவுக்கு வந்த விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது பெரும் விபத்திற்குள்ளானது. இந்த விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி ஒரு பள்ளத்தில் பாய்ந்து இரண்டாக உடைந்தது. அதில் விமானி உள்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், விமான விபத்து நேரிட்ட இடத்தில் கொரோனா தொற்று பரவக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரளத்தில் கொரோனா தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றப்படும் நிலையில், விமான விபத்து மீட்புப் பணிகளில் ஈடுபடுவோர் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என கேரள சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொண்டோட்டி என்ற பகுதியில்தான் விமான நிலையம் அமைந்துள்ளது. ஏற்கெனவே இங்கு கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

விமான விபத்தில் உயிர்பிழைத்த பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அதேபோல மீட்புப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்படுவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.