பெண்களைப் பெட்டியில் அடைக்கப்பட்ட தங்கத்தைப் போல வீட்டிலேயே அடைத்து வையுங்கள் என கேரளாவின் இஸ்லாமிய மதுகுரு அபுபக்கம் முஸ்லியார் குர்ஆனை மேற்கொள் காட்டி பேசியிருந்தது கடுமையான எதிர்வினைகளை பெற்றது. இந்தசூழலில் தான் பேசியது தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டதாக்வும், பெண்களை வீட்டுக்குள் முடக்கிவைக்க இஸ்லாம் போதிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய இஸ்லாமிய அறிஞரும், ‘சமஸ்தா' அமைப்புத் தலைவருமான காந்தபுரம் ஏ.பி. அபுபக்கர் முஸ்லியார், இஸ்லாமிய பெண்கள் குறித்த தனது முந்தைய கருத்துகளுக்கு விளக்கமளித்துள்ளார்.
பெண்களை இரண்டாம் தரமாக நடத்துவதையோ, அவர்களை வீட்டுக்குள் முடக்கிவைப்பதையோ இஸ்லாம் போதிக்கவில்லை என்று கூறினார். தனது முந்தைய கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார். மேலும், தங்கள் அமைப்பின்கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான மாணவிகளுக்கு இலவச கல்வி மற்றும் தங்குமிடம் வழங்கப்பட்டுவருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.