ஜான் பிரிட்டாஸ் fb
இந்தியா

சமக்ர சிக்ஷா திட்டத்தில் நிதி ஒதுக்காத மத்திய அரசு.. கேரள எம்.பி போட்ட பதிவு!

சமக்ர சிக்ஷா திட்டத்தில் நிதி ஒதுக்காத மத்திய அரசு - கேரள எம்.பி ஜான் பிரிட்டாஸ் குற்றச்சாட்டு.

PT WEB

சமக்ர சிக்ஷா திட்டத்தின் மூலம், தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு ஒரு ரூபாய் கூட மத்திய அரசு நிதி வழங்காதது புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் எம்.பி. யான ஜான் பிரிட்டாஸ், சமக்ர சிக்ஷா திட்டத்தின் நிதி பங்கீடு விவரங்கள் தொடர்பாக, மத்திய அரசு வழங்கிய தரவுகளை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 2152 கோடி ரூபாய், கேரளாவுக்கான 328 கோடி ரூபாய் மற்றும் மேற்கு வங்கம் மாநிலத்திற்காக 1745 கோடி ரூபாய் விடுவிக்காமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சுட்டிக்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம்," கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு முறையே ரூ 328 கோடி, ரூ 2151 கோடி, ரூ 1745 கோடி மத்திய அரசு மறுத்திருக்கிறது. இந்தத் தொகைகளை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றக் கல்வித் துறை நிலைக்குழு அறிவுறுத்தியிருக்கிறது தேசிய கல்விக் கொள்கையுடன் இந்தத் தொகைகளை அளிப்பதைப் பிணைக்கக் கூடாது என்றும் நிலைக்குழு அறிவுறுத்தியிருக்கிறது இந்த அறிவுரையை ஏற்று பணங்களை மத்திய அரசு அளிக்கப்போகிறதா அல்லது நிலைக்குழுவின் அறிவுரையைப் புறக்கணிக்கப் போகிறதா என்று பார்க்கலாம்." என்று பதிவிட்டுள்ளார்.