இந்தியா

8 நாள் குழந்தையை கொன்ற தாய்: தனது நிறத்தில் இல்லை என வாக்குமூலம்

8 நாள் குழந்தையை கொன்ற தாய்: தனது நிறத்தில் இல்லை என வாக்குமூலம்

webteam

கேரளாவில் பிறந்து 8 நாட்களே ஆன குழந்தையை கொன்ற தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கோட்டயம்  முறிக்காட்டுகுடி அருகே உள்ள கட்டப்பனாவை சேர்தவர் கண்டதின்கார பின்னு. இவரது மனைவி சந்தியா . வயது 28. இவர்களுக்கு திருமணம் ஆகி 9 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் கர்ப்பம் தரித்த சந்தியாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் சந்தியா தனது கணவரிடம் குழந்தை அசைவற்று இருப்பதாக தெரிவித்துள்ளார். குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் கழுத்தில் கீறல்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து மருத்துவர்கள் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக காவலர்கள் வந்து விசாரித்ததில் குழந்தையை கொன்றதாக சந்தியா தெரிவித்தார். குழந்தையின் கழுத்தை துணியால் சுற்றி கொலை செய்ததாக கூறியவர். கொலை குறித்து காரணம் கேட்கப்பட்டபோது, குழந்தை தனது நிறத்திலும் இல்லை தனது கணவரின் சாயலிலும் இல்லை. இதனால் தான் கொன்றதாக சந்தியா கூறியுள்ளார்.