இந்தியா

சுற்றுலா பயணிகளை கவரும் நீளவால் காட்டுக்கோழிகள்

சுற்றுலா பயணிகளை கவரும் நீளவால் காட்டுக்கோழிகள்

webteam

கேரள மாநிலம் தேக்கடியில் அதிகளவில் சுற்றித்திரியும் காட்டுக் கோழிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனத்துறை சார்பில், வன உயினங்களை வேட்டையாடுவதற்கு கடும் தண்டனை விதிக்கப்படுகிறது. விசாரணையற்ற சிறைவாசத்திற்கு பயந்து, வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்கள் காட்டு முயல், காட்டுகோழிகளை கூட வனச்சொத்தாக பாவிக்கின்றனர். 

இதனால், தேக்கடியில் காட்டு கோழிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குடும்பம் குடும்பமாய் வனத்திற்குள் இருந்து வெளிவரும் காட்டுக்கோழிகள், சாலையோரங்களில் மேய்ச்சலில் ஈடுபடுகின்றன. முன்பெல்லாம் காணக்கிடைக்காத காட்டு கோழிகள், தேக்கடியில் அதிகம் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக புறா அளவில் இருக்கும் கோழி மற்றும் அழகான கொண்டை, நீளமான வாலுடன் துடிதுடிப்பாய் இருக்கும் காட்டுக்கோழி குடும்பங்கள் ஆகியவை காண்போரை கவர்ந்திழுத்து வருகிறது.