இந்தியா

பினராயி விஜயனின் புது அமைச்சரவை எப்போது பொறுப்பு ஏற்பு? - நாளை கூட்டணி கூட்டத்தில் முடிவு

பினராயி விஜயனின் புது அமைச்சரவை எப்போது பொறுப்பு ஏற்பு? - நாளை கூட்டணி கூட்டத்தில் முடிவு

kaleelrahman

சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று கேரள ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார். நாளை திருவனந்தபுரத்தில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்திற்குப் பிறகு பினராயி விஜயன் தலைமையிலான புது அமைச்சரவை என்று பொறுப்பு ஏற்கும் என்பது குறித்து தெரியவரும்.

ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று அதன் முடிவுகள் வெளிவந்தது. இதில் கேரளாவில் ஆட்சி செய்யும் LDF (இடது சாரி கூட்டணி) அரசு அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த நிலையில் இந்த கூட்டணி அரசின் முதல்வராக இருந்த பினராயி விஜயன் நேற்று அவரது சொந்த ஊரான கண்ணூர் மாவட்டம் பினராயில் இருந்து இன்று காலை திருவனந்தபுரம் வந்தார்.

இதையடுத்து இன்று மதியம் கேரள ஆளுநர் ஆரிப்முகம்மது கானை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். கேரள வரலாற்றில் முதல் முறையாக ஆட்சியில் இருக்கும் கட்சியே தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்று ஆட்சியமைப்பது இதுவே முதன்முறை. பினராயி விஜயன் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்பது குறித்து நாளை திருவனந்தபுரத்தில் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் முடிவெடுத்து அதன் பின்பு இடது முன்னணி கூட்டணி கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். அதன்பிறகு இரண்டாவது முறையாக அமைச்சரவை என்று பொறுப்பேற்கும் என்பது குறித்து முடிவெடுக்கும் என கூறப்படுகிறது.