‘ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி ஆசிஃபா பெயரை பத்திரிகையாளர் ஒருவர் தனது மகளுக்கு சூட்டியுள்ளார்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் கத்துவா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஆசிஃபா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை உண்டாக்கியது. பல தரப்பில் இருந்து கண்டன குரல்களும் போராட்டங்களும் தொடர்ந்த வண்ணம் இருகின்றன. இந்நிலையில் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய விடாமல் வழக்கறிஞர்கள் சிலர் தடுத்ததாக புகார்கள் எழுந்த நிலையில் உச்சநீதிமன்றம் அதன் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது. சிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என பிரதமர் நரேந்திர மோடியும் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் கேரள பத்திரிகையாளர் ஒருவர் தனது மகளுக்கு ஆசிஃபா என பெயர்சூட்டியுள்ளார். இத்தகவலை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.