kerala x page
இந்தியா

கேரளா | ஆளுநர் மாளிகையில் காவிக்கொடி ஏந்திய பாரத மாதா படம்.. வெடித்தப் போராட்டம்!

கேரளாவில் பாரத மாதா படம் தொடர்பான சர்ச்சை, அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு வித்திட்டுள்ளது.

PT WEB

கேரளாவில் பாரத மாதா படம் தொடர்பான சர்ச்சை, அரசியல் கட்சிகளின் போராட்டங்களுக்கு வித்திட்டுள்ளது. வியாழக்கிழமை அன்று கேரள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி திடீரென்று வெளிநடப்பு செய்தார். ஆளுநர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த காவிக்கொடி ஏந்திய பாரத மாதா படம் ஆர்.எஸ்.எஸ்-ன்இந்துப் பெரும்பான்மைவாத கொள்கையை முன்னெடுப்பதாக சிவன்குட்டி கூறினார். அமைச்சரின் செயல் ஆளுநரை அவமதித்திருப்பதாக ஆளுநர் மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.

kerala

இந்நிலையில் கேரள இடது முன்னணி அமைச்சர், பாரத மாதாவை இழிவுபடுத்திவிட்டதாக பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி ((ABVP)) உறுப்பினர்கள் மாநில தலைமைச் செயலகத்துக்கு முன்பு கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஏபிவிபி உறுப்பினர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

மறுபுறம் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்திய மாணவர் சங்க உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகையில் நுழைய முயன்றனர். காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தியதை அடுத்து அவர்கள் ஆளுநர் மாளிகை முன்னிலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.