இந்தியா

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.க்கு நினைவிடம்; நிதியை ஒதுக்கிய கேரள அரசு

Sinekadhara

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு நினைவிடம் கட்ட ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.

கலைத்துறையில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில் கேரள பட்ஜெட்டில் சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்த ஊரான, பாலக்காடு அருகே உள்ள எலப்புள்ளி கிராமத்தில், அவருக்கு நினைவிடம் கட்டப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு மறைந்த எம்.எஸ்.விஸ்வநாதனை கவுரப்படுத்தும் விதமாக, இந்த அறிவிப்பை கேரள அரசு வெளியிட்டுள்ளது.