இந்தியா

கேரள தங்க கடத்தல்: ஸ்வப்னா சுரேஷூக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

கேரள தங்க கடத்தல்: ஸ்வப்னா சுரேஷூக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

jagadeesh

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் குமார் ஆகியோருக்கான நீதிமன்றக் காவல் வரும் செப்‌டம்பர் மாதம் 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

துபாயில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை தூதரக முகவரியிட்டு 100 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் கேரள அரசின் ஒப்பந்த அதிகாரியான ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஸ்வப்னாவின் வங்கி லாக்கரில் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு கோடி ரூபாய் மற்றும் ஒரு கிலோ தங்க நகைகள் குறித்து விசாரணை நடத்த அவரது நீதிமன்றக் காவலை நீட்டிக்கக் கோரி, அமலாக்கத் துறை சார்பில் எர்ணாகுளம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித்குமார் ஆகியோருக்கான காவலை வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.