இந்தியா

மொட்டை மாடியில் சிக்கித்தவித்த குழந்தை மீட்பு

மொட்டை மாடியில் சிக்கித்தவித்த குழந்தை மீட்பு

rajakannan

கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்த வீடு ஒன்றில் மொட்டைமாடியில் சிக்கித்தவித்த குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டது. 

கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்து அம்மாநிலத்தையே புரட்டி போட்டுள்ளது. 100 ஆண்டுகளில் இல்லாத கடுமையான பாதிப்பு கேரளாவில் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி மக்கள் வாழும் பகுதிகளில் வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. 300க்கும் மேற்பட்ட மக்கள் தங்களை உயிரை இழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். கேரள அரசு சார்பில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மத்திய அரசும் உதவிகளை செய்து வருகிறது. 

கேரளாவில் பெய்துவரும் கனமழைக்கு ஆலப்புழா மாவட்டமும் தப்பவில்லை. மாவட்டத்தின் பல பகுதிகளில் பல அடி உயரத்துக்கு மழைநீர் ஆறுபோல் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் வெள்ளம் சூழ்ந்த வீட்டின் மொட்டை மாடியில் சிக்கி தவித்த குழந்தையை பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். அக்குழந்தையை விமானத்தில் இருந்த அதன் தாயிடம் விமானப்படை வீரர்கள் ஒப்படைத்தனர்.