இந்தியா

"7.24 லட்சம் பேர் முகாமில் தஞ்சம்" : பினராயி விஜயன்

"7.24 லட்சம் பேர் முகாமில் தஞ்சம்" : பினராயி விஜயன்

webteam

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் 7,24,649 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தொடர் மழை காரணமாக கேரள மாநிலம் முழுவதும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், வெள்ளப் பெருக்கு, மண்சரிவு போன்ற இடர்களில் சிக்கியவர்களை அதிவிரைவுப் படையினர், ராணுவம் மற்றும் தேசிய பேரிடர்‌ மீட்பு படை போன்ற குழுக்கள் மீட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாடெங்கும் உள்ள தேசிய பேரிடர்‌ மீட்பு படை 58‌ குழுக்களும் கேரளாவில் பணியில் உள்ளதா‌கவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வரை 7,24,649 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, வெள்ள பாதிப்புகளில் இன்று மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 22,034 பேர் மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியிருப்போர் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.