இந்தியா

கேரள யானை உயிரிழப்பு விவகாரம்: மலப்புரம் மாவட்ட ஆட்சியர் விளக்கம்

PT

கேரளாவில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரத்தில், கேரள மாநிலம் மலப்புர மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

கேரளாவில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ சந்தேகத்திற்குரிய வெடிபொருள் வாயில் வெடித்ததில் கடந்த 27-ஆம் தேதி கேரளாவில் கர்ப்பிணி யானை இறந்துள்ளதை நாம் அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் இந்தச் சம்பவம் கேரள மாநிலம் மலப்புரத்தில் நடந்ததாக தவறான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் சம்பவம் அங்கு நடக்கவில்லை.


இந்தக் கொடூர சம்பவம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மன்னர்காடு பகுதியில்தான் நடந்தது. யானை உயிரிழந்ததையடுத்து பாலக்காடு மாவட்ட வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாணை நடத்தி வருகின்றனர். இதற்காக மலப்புர மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்ய தயாராக இருக்கிறது. வரும் காலத்தில் மலப்புரம் மாவட்டத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என அவர் பதிவிட்டுள்ளார்.