வி.டி.சதீசன், ரமேஷ் சென்னிதலா, கே.சி.வேணுகோபால்  புதிய தலைமுறை
இந்தியா

கேரளா | அடுத்த முதல்வர் யார்.. பட்டியலில் 3 பேர்.. காங். முடிவு என்ன?

காங்கிரஸ் 63 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 22 தொகுதிகளிலும், கேரள காங்கிரஸ் 7 இடங்களிலும் வெற்றி பெற்றது.

Prakash J

கேரளாவில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றிருக்கும் நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற பேச்சு எழுந்துள்ளது. அந்த வகையில், ரமேஷ் சென்னிதலா, கே.சி.வேணுகோபால், வி.டி. சதீசன் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. இவர்களில் யாரை கட்சித் தலைமை கைகாட்டுகிறது என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெற்ற நிலையில், ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இருந்தது. இறுதியில், அக்கூட்டணி பெரும்பான்மையைவிட அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. குறிப்பாக, காங்கிரஸ் 63 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 22 தொகுதிகளிலும், கேரள காங்கிரஸ் 7 இடங்களிலும் வெற்றி பெற்றது.

அதேநேரத்தில், இடது முன்னணி கூட்டணி நடப்பு தேர்தலில் 35 இடங்களில் வென்று எதிர்க்கட்சி ஆகியுள்ளது. இதன்மூலம், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி பத்தாண்டுக்கால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. இந்த நிலையில், கேரளத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைய உள்ள நிலையில், முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோர் போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் இடதுசாரிகளுக்கு எதிரான களத்தை கடந்த 5 ஆண்டுகளாக கட்டமைத்து வந்த சதீசனுக்கே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவர் தற்பாது பரவூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். தற்போது கேரளா சட்டசபையில் காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார். மேலும், இவருக்கு கட்சித் தொண்டர்களின் ஆதரவும் பிரதான கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் ஆதரவும் இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரம் ரமேஷ் சென்னிதலாவுக்கு கட்சியின் மூத்த தலைவர்கள், தலைமையின் ஆதரவு இருப்பதாகத் தெரிகிறது.

வேணுகோபால்

இவர், தற்போது ஹரிபாத் தொகுதியில் 23,377 வாக்குகள் வித்தியாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் டிடி ஜிஸ்மனை வீழ்த்தி உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கே.சி.வேணுகோபாலுக்குத் தேர்வான எம்எல்ஏக்களில் பலரது ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. இவர், சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கேவிற்கு மிகவும் நெருக்கமானவர். காங்கிரஸ் கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளராக செயல்பட்டு வரும் இவர், தற்போது கேரளாவின் ஆழப்புழா தொகுதியின் எம்பியாக இருக்கிறார். இவர்களில் யாரை கட்சித் தலைமை கைகாட்டுகிறது என்பது ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.