இந்தியா

அப்போலோவில் கேரள முதல்வர்: காரணம் என்ன?

அப்போலோவில் கேரள முதல்வர்: காரணம் என்ன?

Rasus

கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே அவருக்கு பெட் ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து மருத்துவனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வருடாந்திர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை அவர் டிஷ்ஜார் செய்யப்படுவார் என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மருத்துவமனையின் உயர்சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள கேரள முதல்வருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரத்ததில் திடீரென ஏற்பட்ட வெள்ளையணு மாறுபாடுகள் தொடர்பாக பரிசோதனையும், மேல் சிகிச்சைக்காக முழுவுடல் சோதனை என்று சொல்லகூடிய பெட் ஸ்கேனும் தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து சென்று எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.