கேரள முதல்வர் பினராயி விஜயன் pt web
இந்தியா

#KeralaElectionResults | ஆதிக்கம் செலுத்தும் காங்... பின்னடைவில் பினராயி.. முன்னேறாத பாஜக!

கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

Prakash J

கேரளாவின் ஆரம்பகட்ட நிலவரங்களில் 10 இடங்களுக்கு மேல் இருந்த பாஜகவின் முன்னிலை தற்போது 2ஆகக் குறைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 100 இடங்கள் முன்னிலையை நெருங்கி வரும் நிலையில், இடது முன்னணி 44 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. வாக்கு எண்ணிக்கை தொடரும் நிலையில், பாஜக தற்போது இரண்டு இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்துகிறது.

பினராயி விஜயன்

இதற்கிடையே, ஐந்தாம் சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் தனது தர்மடம் தொகுதியில் தொடர்ந்து பின்தங்கியுள்ளார். அதேபோல், அவரது அமைச்சரவை சகாக்கள் 12 பேரும் ஆரம்பகட்ட நிலவரத்தில் பின்தங்கியுள்ளனர்.