dhuruvan google
இந்தியா

கேரளா: கிணற்றில் விழுந்த பொம்மையை எடுக்க முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்..!

பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்த துருவன், தனது சகோதரி த்ருவிகாவுடன் முற்றத்தில் விளையாடியுள்ளார். அப்பொழுது அவரது கையில் இருந்த பொம்மையானது அவர்களின் வீட்டிற்கு பின்கட்டிலுள்ள கிணற்றுக்குள் விழுந்துள்ளது.

Jayashree A

கேரளாவை அடுத்துள்ள நேமம் கிராமத்தில் கிணற்றில் விழுந்த பொம்மையை எடுக்க முயன்ற ஐந்து வயது சிறுவன் கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரளாவை அடுத்த நேமத்தைச் சேர்ந்தவர் சுமேஷ் மற்றும் ஆர்யா தம்பதியினர். இவர்களுக்கு துருவன் என்ற ஐந்து வயது மகனும், த்ருவிகா என்ற இரண்டு வயது மகளும் இருந்துள்ளனர். துருவன் அப்பகுதியில் உள்ள ஒரு நர்சரி பள்ளியில் படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று, பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்த துருவன், தனது சகோதரி த்ருவிகாவுடன் முற்றத்தில் விளையாடியுள்ளார். அப்பொழுது அவரது கையில் இருந்த பொம்மையானது அவர்களின் வீட்டிற்கு பின்னால் இருக்கும் கிணற்றுக்குள் விழுந்துள்ளது.

பொம்மையை எடுக்க நினைத்த துருவன் கிணற்றிற்கு அருகில் சென்று பொம்மையை தேடியுள்ளார். ஆனால் கிணற்றின் உயரம் எட்டாததால், வீட்டினுள்ளிருந்து ஒரு நாற்காலியை எடுத்துவந்து போட்டு அதில் ஏறி பார்த்த சிறுவன் தவறுதலாக கிணற்றில் விழுந்து இருக்கிறார்.

இது ஏதும் அரியாத சிறுவனின் தாய் ஆர்யா வீட்டு வேலையில் கவனம் செலுத்தியிருந்துள்ளார். பிறகு குழந்தை துருவனை காணாததால் அக்கம்பக்கத்தில் தேடியதுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் கிணற்றின் அருகில் நாற்காலி கிடந்ததை அடுத்து கிணற்றில் சென்று பார்க்கையில் சிறுவன் கிணற்றில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயணைப்புப்படையினருக்கு தகவர் தெரிவித்ததுடன், அவர்கள் குழந்தையையும் பொம்மையையும் கிணற்றிலிருந்து வெளியே எடுத்துள்ளனர். பின்னர் துருவனை அருகில் இருந்த மருத்துவமனைக்கு எடுத்துச்சென்ற சமயம் அவர் ஏற்கெனவே இறந்ததாக தெரியவந்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.