கொச்சி ஏர்போர்ட் புதியதலைமுறை
இந்தியா

விமான பயணத்தில் சீரியஸ் ஆன 11 மாத குழந்தையின் உடல்நிலை.. சிகிச்சை பலனின்றி மரணித்த சோகம்!

தோஹாவில் இருந்து கொச்சி சென்ற விமானத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்ட 11 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Jayashree A

தோஹாவில் இருந்து கொச்சி சென்ற விமானத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்ட 11 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

மலப்புரத்தைச் சேர்ந்த ஃபெசின் அஹமத் தம்பதியினருக்கு 11 மாதக்குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்த குழந்தை குறைந்த மாத பிரசவத்தில் பிறந்ததால் பிறக்கும் பொழுதே இதயக்கோளாறுடன் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், இக்குழந்தைக்கு தோஹாவில் சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளனர்.

விமானம்

இருப்பினும் தனது சொந்த ஊரான கேரளாவில் சிகிச்சை அளித்தால் குழந்தை குணமடையக்கூடும் என்று நினைத்த ஃபெசின் அஹமத் தனது குடும்பத்தினருடன் தோஹாவில் இருந்து கல்ஃப் ஏர் விமானத்தில் கொச்சி நெடும்பசேரி வந்திருந்தார்.

விமானத்திலேயே குழந்தைக்கு உடல் ரீதியாக சிரமம் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் குழந்தையை ஒருவாறு சமாளித்துக்கொண்டு உடனடியாக அங்கமாலியில் உள்ள லிட்டில் பிளவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் மருத்துவரால் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியவில்லை...

குழந்தை

குழந்தை இறப்பிற்கான காரணத்தை தெரிந்துக்கொள்ள பிரேத பரிசோதனை தேவை என்று போலிசார் தெரிவித்து இருந்தனர். இருப்பினும் குழந்தையின் மருத்துவ அறிக்கை மற்றும் மருத்துவர்களின் கூற்றை கருத்தில் கொண்டு, பிரேத பரிசோதனையை தவிர்த்து குழந்தை பெற்றோரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.