இந்தியா

ஃபிராங்கோவின் ஜாமின் மனு தள்ளுபடி.. கன்னியாஸ்திரிகள் வரவேற்பு..!

ஃபிராங்கோவின் ஜாமின் மனு தள்ளுபடி.. கன்னியாஸ்திரிகள் வரவேற்பு..!

Rasus

கேரளாவில் பாலியல் புகார் வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் பேராயரை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுக்குழுவுக்கு, கோட்டயம் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மேலும், அவரது ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது.

கன்னியாஸ்திரி அளித்த புகாரின்பேரில் 3 நாட்களாக முன்னாள் பேராயர் ஃபிராங்கோ முல்லக்கல்லிடம் விசாரணை நடந்து வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் அவர் கைது செய்யப்பட்டார். கைதான சில மணி நேரங்களில் நெஞ்சுவலி ஏற்பட்டதாக ஃப்ராங்கோ கூறியதை அடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வெளிவந்தார். இதையடுத்து கோட்டயம் நீதிமன்றத்தில் ஃப்ராங்கோ ஆஜர்படுத்தப்பட்டு செப்டம்பர் 24-ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் அனுமதி பெற்றனர்.

இதனிடையே ஃபிராங்கோவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அறிந்த சிலர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். கன்னியாஸ்திரி ஒருவர், ஃபிராங்கோ முல்லக்கல் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்திருந்தார். அதனால், அவருக்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தநிலையில், ஃபிராங்கோவின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட செய்தி அறிந்து, கொச்சியில் கன்னியாஸ்திரிகளும் இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.