டெல்லியில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தி அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.
இதுகுறித்து பேசிய அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் “அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் ஊரடங்கை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லியில் வார இறுதி நாட்களில் செயல்பட்டு வந்த மார்க்கெட்டுகள் இனி வார நாட்களில் செயல்படும். வார இறுதி நாட்களில் ஹோட்டல்கள், தியேட்டர்கள், மால்கள் செயல்படாது. ஹோட்டல்களில் பார்சல் வழங்க அனுமதிக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.