இந்தியா

குளிர்சாதனங்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்- மத்திய அரசு

குளிர்சாதனங்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்- மத்திய அரசு

webteam

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க குளிர்சாதனங்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருப்பதால், மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கின்றனர். கோடைக்காலம் என்பதால் குளிர்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலிலிருந்து தற்காத்துக்கொள்ள குளிர்சாதனங்களில் வெப்ப நிலையை 24 முதல் 30 டிகிரி என்ற அளவிலும் ஈரப்பதத்தின் அளவினை 40 முதல் 70 சதவீதத்துக்குள் வைத்துக்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் சூரிய ஒளி, வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றால் கொரோனா வைரஸின் வீரியம் குறையும் என அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்த நிலையில், மத்திய அரசு குளிர்சாதனங்களை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.