இந்தியா

ஆண்டவா காப்பாத்து: காவ்யா குடும்பம் சிறப்பு வழிபாடு!

ஆண்டவா காப்பாத்து: காவ்யா குடும்பம் சிறப்பு வழிபாடு!

webteam

பிரபல நடிகை பாவனாவை கடத்தி பாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கான போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் அவர் மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவன் தலைமறைவாகிவிட்டதாக முதலில் செய்திகள் வெளியானது. ஆனால், அவரிடம் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தியதாக இப்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதற்கிடையே, காவ்யா மாதவன் குடும்பத்தினர் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். கண்ணூர் மாவட்டத்தில் தளிபரம்பு என்ற இடத்தில் உள்ள ராஜராஜேஸ்வரர் கோயிலில் நேற்று அவர்கள் குடும்பத்துடன் வழிபாடு செய்தனர். இதில் காவ்யா மாதவனும் கலந்துகொண்டார் என்று கூறப்படுகிறது.