இந்தியா

ஆசிஃபா வழக்கிற்கு சிறப்பு விரைவு நீதிமன்றம்: மெகபூபா

ஆசிஃபா வழக்கிற்கு சிறப்பு விரைவு நீதிமன்றம்: மெகபூபா

webteam

காஷ்மீர் கதுவாவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தொடர்பாக சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என முதலமைச்சர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் கதுவாவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என அம்மாநில உயர்நீதிமன்றத்தை கேட்டுக்கொள்ள இருப்பதாக முதலமைச்சர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். அவ்வாறு அமைக்கப்பட்டால் காஷ்மீரில் அமைக்கப்படும் முதல் சிறப்பு விரைவு நீதிமன்றமாக இது இருக்கும். இந்த நீதிமன்றம் வழக்கை 90 நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த ஜனவரி மாதம், காஷ்மீரின் கத்துவாவில் 8 வயது சிறுமியைக் கடத்தி, மயக்க மருத்து கொடுத்து, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டது தொடர்பாக நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் விரைவு நீதிமன்றம் அமைக்கவேண்டும் என அம்மாநில முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார்.