இந்தியா

காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர் யாசின் மாலிக் கைது

காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத் தலைவர் யாசின் மாலிக் கைது

Rasus

ஜம்மு & காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத் தலைவர் முகம்மது யாசின் மாலிக் மற்றும் முகம்மது கல்வால் ஆகியோர் பாதுகாப்பு படையினரால் இன்று கைது செய்யப்பட்டனர்.

காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்களில் ஒன்றான உம்மத்-இ-இஸ்லாமியா அமைப்பின் தலைவர் மவுலானா சர்ஜான் பர்காதி என்பவரை பாதுகாப்பு படையினர் கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளனர். அவரது குடும்பத்தாரை சந்திப்பதற்காக ஜம்மு & காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத் தலைவர் முகம்மது யாசின் மாலிக், சோபியான் மாவட்டம் ரேபான் பகுதியிலுள்ள அவரது வீட்டுக்கு இன்று காலை சென்றார்.

மவுலானா சர்ஜான் பர்காதியின் குடும்பத்தாரை சந்தித்துவிட்டு, அவர்களது வீட்டை விட்டு வெளியே வந்தபோது, முகம்மது யாசின் மாலிக்கை சோபியான் மாவட்ட போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவருடன் சென்ற அந்த இயக்கத்தின் மண்டலத் தலைவர் நூர் முகம்மது கல்வால் என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவரையும் மறைமுக இடத்திற்கு பாதுகாப்பு படையினர் அழைத்துச் சென்றதற்கு ஜம்மு & காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்க செய்தித் தொடர்பாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.