இந்தியா

சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழப்பு 40 ஆக உயர்வு

சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழப்பு 40 ஆக உயர்வு

webteam

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரிலிருந்து ஸ்ரீநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இந்திய பாதுகாப்பு படையினர், ராணுவ வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற வாகனம் இலக்கு வைத்து தாக்கும் லாஞ்சர் மூலம் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் 54 பாதுகாப்பு வீரர்கள் வந்த ராணுவப் பேருந்து நிலைகுலைந்தது. அதன்பின்னர், அந்த வாகனம் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் பாதுகாப்பு படையினர் 18 உயிர்த்தியாகம் செய்தனர். இந்த எண்ணிக்கை சற்று நேரத்தில் 30 ஆக உயர்ந்தது. 

இந்நிலையில் உயிரிழந்த பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் நடந்த மிகப் பெரிய தாக்குதலாக இது உள்ளது. நாட்டின் அனைத்து தலைவர்களும் உயிரிழந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தீவிர ஆலோசனை மற்றும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

முன்னதாக, இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு ஜைஸ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை எதிர்த்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விசாரணையில், அடில் அகமது என்ற பயங்கரவாதியின் தலைமையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ககாபொராவில் உள்ள புல்வாமா பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 2018ஆம் ஆண்டு ஜைஸ்-இ-முகமது இயக்கத்தில் சேர்ந்தவர்.