மத்திய அரசுடன் தமக்கு பல விஷயங்களில் மாற்றுக்கருத்து இருந்தாலும் காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானோ அல்லது வேறு எந்த நாடோ தலையிட எந்த முகாந்திரமும் இல்லை என தெளிவுபடுத்த விரும்புவதாக கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் வன்முறை இருப்பதற்கு காரணம் பாகிஸ்தான் அதை தூண்டுவதுதான் எனக் குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் முக்கிய ஆதரவாளராக அறியப்படும் நாடு பாகிஸ்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காஷ்மீரில் கொடுமையான நிர்வாகம் நடைபெறுவதாக கூறிய ராகுல் காந்தியின் கருத்தினை பாகிஸ்தான் தனக்கு சாதகமாக ஐ.நாவில் பயன்படுத்தும் என பாஜக கூறியிருந்தது. தன்னுடைய கருத்துக்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சரும் பாஜக செய்தி தொடர்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார். ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் தங்களது கருத்துக்களை திரும்ப பெற வேண்டுமென அவர் வலியுறுத்தியிருந்தார்.