இந்தியா

காஷ்மீர்: பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்தார் அமித் ஷா

Veeramani

காஷ்மீரில் வெளிமாநிலத்தவர்களை சிலரை பயங்கரவாதிகள் கொன்ற நிலையில் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆறுதல் கூறினார்

காஷ்மீரில் வெளிமாநிலத் தொழிலாளர்களை பயங்கரவாதிகள் தொடர்ந்து குறிவைத்து தாக்கி வருகின்றனர். சிலர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பிறர் அச்சத்துடன் தங்கள் சொந்த மாநிலத்திற்கு வெளியேறி வருகின்றனர். இதையடுத்து காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. காஷ்மீர் நிலவரம் குறித்து பிரதமர் மோடியை சந்தித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா எடுத்துரைத்தார், இந்நிலையில் அமித் ஷா 3 நாள் பயணமாக ஸ்ரீநகர் சென்றுள்ளார். அமித் ஷா தங்கியுள்ள ஆளுநர் மாளிகையை சுற்றிலும் 20 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறி தவறாமல் சுடுவதில் தேர்ந்த வீரர்கள் ஆளுநர் மாளிகையை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளனர். ட்ரோன் விமானம் மூலமும் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து அமித் ஷா ஆறுதல் கூறினார். இதைத் தொடர்ந்து காஷ்மீரில் மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகள், பாதுகாப்பு படையினருடன் அமித் ஷா ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.