இந்தியா

ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து 4 இடங்களில் பனிச்சரிவு: 12 பேர் உயிரிழப்பு

Rasus

ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 6 ராணுவ வீரர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாக, ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எல்லைப்பகுதி அருகே மச்சில் என்ற இடத்தில் அமைந்திருக்கும் ராணுவ நிலை அருகே திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் ஐந்து ராணுவ வீரர்கள் சிக்கினர். உடனடியாக மீட்புப் பணிகள் மேற்கொண்டபோதிலும், வீரர்கள் யாரையும் காப்பாற்ற முடியவில்லை என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல், கந்தர்பால் மாவட்டம், ககன்கிர் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில், பொதுமக்களில் 9 பேர் சிக்கினர்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற மீட்புப் படையினர், அவர்களில் நான்கு பேரை மீட்டனர். ஐந்து பேர் உயிரிழந்தனர். பந்திபோரா மாவட்டத்திலும் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதில், நான்காவது சம்பவமாக எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நவுகாம் இன்ற இடத்தில் அமைந்துள்ள ராணுவ நிலை அருகிலும் பனிச்சரிவு ஏற்பட்டதில் எல்லை பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.