காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தாத்தாவின் உடலில் 3 வயது சிறுவன் அமர்ந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது
காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 60 வயதான முதியவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இன்று காலை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையின் போது அவ்வழியாக சென்ற முதியவர் மீது பயங்கரவாதிகளின் தோட்டாக்கள் பாய்ந்தது. இதில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அப்போது அவருடன் வந்த 3 வயது பேரனும் அருகில் இருந்துள்ளார். என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இறந்த தன்னுடைய தாத்தாவின் அருகிலேயே நின்றுள்ளான். உடனடியாக அவனை அந்த இடத்திலிருந்து பாதுகாப்புப்படைவீரர் நகரச் சொல்வது, அதன் பின்னர் தாத்தாவின் உடல் மீது சிறுவன் அமர்ந்திருப்பதும் போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பின்னர் அந்த சிறுவனை பாதுகாப்புப் படைவீரர் ஒருவர் மீட்டு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.