இந்தியா

ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் குதிக்கும் காஷ்மீர் ஐ.ஏ.ஏஸ்!

webteam

காஷ்மீர் மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷா பைசல், தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர அரசியலில் இறங்கிறார்.

காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷா பைசல் (35). 2009-ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். அதிகாரியானார். காஷ்மீர் மாநில இளைஞர்களுக்கு முன் மாதிரியாக திகழ்ந்த இவர், அந்த மாநிலத்தில் இருந்து சிவில் சர்வீஸ் தேர்வில் முதலிடம் பிடித்தவர். இவர் தனது முக நூலில், பதவியை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்.

காஷ்மீரில் தொடர்ந்து படுகொலைகள் நடந்துவருகிறது. அதை தடுக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. காஷ்மீர் மக்களின் நலன் கருதி, ராஜினாமா செய்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை மேலும் விளக்கம் அளிக்க உள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

(ஒமர் அப்துல்லா)

ஷா பைசலின் இந்த முடிவை ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவருமான ஒமர் அப்துல்லா வரவேற்றுள்ளார். தேசிய மாநாட்டு கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி சார்பில் பாரமுல்லா தொகுதியில் பைசல் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.