சிபிஐ காவலில் உள்ள தனது தந்தை சிதம்பரம், நல்ல நிலையில் இருப்பதாக அவரது மகன் கார்த்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் காவலில் உள்ள சிதம்பரத்தை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம், “ எனது தந்தை உற்சாக மனநிலையில் உள்ளார். என்னையும், தாயையும் சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்தார். இன்றைக்கு நடைபெற்ற நீதிமன்ற நிகழ்வுகள் குறித்து விவாதித்தோம். என்னுடைய மகளின் நலனை விசாரித்தார்.
அவர் நல்ல நிலையில் உள்ளார். இந்திய அரசு வழங்கும் விருந்தோம்பலை அனுபவித்து வருகிறார். எந்த ஊழல்வாதியும் தப்பவிடக்கூடாது என்பது உண்மைதான். நானும் எந்த தந்தையும் எவ்வித தவறும் செய்யவில்லை. நாங்கள் குறிவைக்கப்பட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.