செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
அசாமைச் சேர்ந்த மாயா கோகோய் என்ற பிரபல இளம்பெண் யூ-டியூபர், பெங்களுரில் எச்எஸ்ஆர் லெ-அவுட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடன் கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஆரவ் ஹர்னி பழகி வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில், மாயா கோகோய் மற்றும் ஆரவ் ஹர்னி ஆகிய இருவரும் கடந்த 23ம் தேதி பெங்களுாரு இந்திரா நகர் பகுதியில் உள்ள சர்வீஸ் அபார்ட்மெண்ட்டில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
இதையடுத்து 24 ஆம் தேதி மாயா கோகோய்யை, ஆரவ் ஹர்னி மார்பில் பலமுறை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு அங்கேயே சடலத்துடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்த நிலையில், நேற்று காலை அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.