இந்தியா

கர்நாடகா: தண்ணீர் குடித்துவிட்டு நதிநீர் கால்வாயில் சிக்கித்தவித்த காட்டு யானைகள்

கர்நாடகா: தண்ணீர் குடித்துவிட்டு நதிநீர் கால்வாயில் சிக்கித்தவித்த காட்டு யானைகள்

kaleelrahman

கர்நாடகாவில் நதிநீர் கால்வாயில் இறங்கி தண்ணீர் குடித்த 5 காட்டு யானைகள், கால்வாயில் இருந்து மேலே வர முடியாமல் தத்தளிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் ஹன்சூரில் உள்ள நாகரஹோளே தேசிய பூங்காவில் இருந்து ஐந்து காட்டு யானைகள் தண்ணீர் தேடி பூங்கவில் இருந்து வெளியேறியுள்ளது. இதையடுத்து அருகிலுள்ள ஊமந்தூர் கிராமத்தில் உள்ள தண்ணீர் நிறைந்த லட்சுமண தீர்த்தம் நதி கால்வாயில் இறங்கி தண்ணீர் குடித்து விட்டு திரும்ப முயன்றுள்ளன. அப்போது கால்வாயில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தன.

கால்வாயில் இருந்து யானைகளால் மேலே வர முடியாமல் அவதிப்பட்டது. யானைகள் கால்வாயில் இருந்து மேலே ஏறும்போது சறுக்கி மீண்டும் மீண்டும் கால்வாயில் இறங்கியது. இந்நிலையில், அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு கூடியதால் பீதியில் காட்டு யானைகள் அங்குமிங்கும் ஓடியது.

நீண்ட நேரம் கால்வாயில் சிக்கி தவித்த காட்டு யானைகள், ஒரு வழியாக மக்கள் கீழே இறங்கும் படிக்கட்டுகள் வழியாக ஏறி வனப்பகுதிக்குள் சென்றன.