model image pti
இந்தியா

கர்நாடகா | லிட்டருக்கு 4 ரூபாய்.. ஏப்ரல் 1 முதல் பால் விலை உயர்வு!

கர்நாடக மாநிலத்தில், ஏப்ரல் 1 முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.4 அதிகரிக்கும் என்று மாநில கூட்டுறவு அமைச்சர் கே.என்.ராஜண்ணா தெரிவித்துள்ளார்.

Prakash J

கர்நாடக மாநிலத்தில், ஏப்ரல் 1 முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.4 அதிகரிக்கும் என்று மாநில கூட்டுறவு அமைச்சர் கே.என்.ராஜண்ணா தெரிவித்துள்ளார்.x

milk

அண்டை மாநிலமான கர்நாடகாவில் சித்தராமையான தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், வரும் ஏப்ரல் 1 முதல் பால் விலை உயர இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, இன்று செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில கூட்டுறவு அமைச்சர் கே.என்.ராஜண்ணா, "விலைகளை உயர்த்துவது பால் கூட்டமைப்பு எடுத்த முடிவு. அவர்கள் லிட்டருக்கு ரூ.5 உயர்த்தி கேட்டனர். இதற்கு அரசாங்கம் ஒப்புக்கொண்டு ஏப்ரல் 1 முதல் ரூ.4 உயர்வுக்கு முடிவு செய்துள்ளது. உயர்த்தப்பட்ட ரூ.4 முழுவதும் விவசாயிகளுக்குச் செல்ல வேண்டும்" என்று கூறினார்.

முன்னதாக, பேருந்து மற்றும் மெட்ரோ மற்றும் மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட்டதை அடுத்து பால் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.