தந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகன் கைது pt desk
இந்தியா

இன்சூரன்ஸ் பணத்தின் மீது ஆசை - தந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகன்..!

கர்நாடகாவில் 1 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்திற்கு ஆசைப்பட்டு தந்தையை கொலை செய்துவிட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடிய மகனை போலீசார் கைது செய்துள்ளனர்

PT WEB

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் பிரியாபட்டினம் அருகேயுள்ள கொப்பா கிராமம் ஜெரோசி காலனியைச் சேர்ந்தவர் பாண்டு. இவர், தனது தந்தை அண்ணப்பவுக்கு ஒரு கோடி ரூபாய் வரை காப்பீடு செய்துள்ளார். இந்நிலையில், தந்தை மீது செய்யப்பட்டுள்ள காப்பீடு தொகை மீது பேராசை கொண்ட பாண்டு, தந்தையை கொலை செய்து விட்டு காப்பீடு பணத்தை பெற முடிவு செய்துள்ளார்.

தந்தை கொலை

இதையடுத்து தனது தந்தையை தனியார் தொழிற்சாலையில் வேலைக்குச் செல்லுமாறு பாண்டு தெரிவித்துள்ளார். அதன்படி அண்ணப்பாவும் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்து சென்ற மகன் பாண்டு, ஆள்நடமாட்டம் இல்லாத பிரியபட்டினம் பைலுகுப்பே பகுதியில் அண்ணப்பாவின் தலையில் உருட்டு கட்டையால் பலமாக அடித்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த அண்ணப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தந்தையின் உடலை அங்கிருந்து எடுத்துச் சென்று மஞ்ச தேவனஹள்ளி பகுதியில் சாலையோர வீசிவிட்டுச் சென்றுள்ளார். விட்டு, இந்நிலையில், காவல் நிலையம் சென்ற பாண்டு, தன் தந்தை மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டுச் சென்றுவிட்டதாகவும் இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறியுள்ளார்.

Police station

ஆனால், அவருடைய நடவடிக்கையில் சந்தேகமடைந்த போலீசார், தீவிர விசாரணை நடத்தியுள்ளார் அப்போது இன்சூரன்ஸ் பணத்திற்காக தந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து பையிலுக்குப்பே போலீசார், அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் இதற்கிடையே அண்ணப்பா உயிரிழந்த சம்பவம் குறிதது அறிந்த அவருடைய அண்ணன் தர்மன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.