இந்தியா

அந்நிய நேரடி முதலீட்டில் ஏற்றம் கண்ட கர்நாடகா..! குஜராத், தமிழகத்தின் நிலை தெரியுமா..?

அந்நிய நேரடி முதலீட்டில் ஏற்றம் கண்ட கர்நாடகா..! குஜராத், தமிழகத்தின் நிலை தெரியுமா..?

webteam

2017-18 ஆம் நிதியாண்டில் கர்நாடகாவில் அந்திய நேரடி முதலீட்டின் மதிப்பு 300 சதவீதம் உயர்வு கண்டுள்ளது. அதேசயமம் குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அந்திய நேரடி முதலீட்டின் மதிப்பு குறைந்துள்ளது.

இந்தியாவில் அந்திய நேரடி முதலீட்டை ஏற்படுத்த பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனால் பல துறைகளில் அந்திய நேரடி முதலீட்டுக்கான கதவுகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த மார்ச் வரையிலான ஒரு வருட காலத்தில் கர்நாடகாவில் அந்நிய நேரடி முதலீடு 300 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கடந்த 2016-17- ஆம் நிதியாண்டில் கர்நாடகாவில் 2.13 பில்லியன் டாலராக  இருந்த அந்திய நேரடி முதலீட்டு மதிப்பு 2017-18-ஆம் நிதியாண்டில் 8.58 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இது 300 சதவீதம் அதிகம் ஆகும்.

அதேபோல கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில் தமிழகத்தில் அந்திய நேரடி முதலீட்டு மதிப்பு 2.22 பில்லியன் டாலராக இருந்தது. இது 2017-18-ஆம் நிதியாண்டில் 56 சதவீதம் ஏற்றம் கண்டு 3.47 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அதேசமயம் குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் முந்தைய நிதியாண்டை காட்டிலும் தற்போது அந்நிய நேரடி முதலீட்டு மதிப்பு குறைந்துள்ளது.

குஜராத்தில் தற்போதைய நிதியாண்டில் அந்திய நேரடி முதலீட்டு மதிப்பு 43 சதவீதம் குறைவு கண்டு 1.24 பில்லியன் டாலராக உள்ளது. கணிணி மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டின் மதிப்பு கடந்த நிதியாண்டில் 68 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது. அதேசமயம் வங்கி, காப்பீடு உள்ளிட்ட துறைகளில் அந்திய நேரடி முதலீட்டின் மதிப்பு 23 சதவீதம் சரிவு கண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் ரிசர்வ் வங்கி தாக்கல் செய்த புள்ளி விவரத்தில் இந்த தகவல் கிடைத்துள்ளது.