கர்நாடகாவில் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடியூரப்பா, இன்று தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை புதிய முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த எடியூரப்பா பதவியேற்றார். நாளை பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவதாக கூறியுள்ள எடியூரப்பா இன்று, விதான் சவுதாவில் பாஜக எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
இந்நிலையில் கர்நாடக பேரவையை சுற்றி நாளை காலை 6 மணி முதல் 30-ஆம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சபாநாயகர் ரமேஷ் குமார் பதவி விலகாவிடில், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என பாஜக அறிவித்துள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மூவரை தகுதிநீக்கம் செய்துள்ள சபாநாயகர் மீதமுள்ளவர்கள் குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.