கர்நாடகாவில் செல்ஃபி எடுக்க முயன்ற ஆதரவாளரின் மொபைலை அமைச்சர் ஒருவர் தட்டிவிட்ட சம்பவம் நடந்துள்ளது.தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவிவருகிறது.
கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. சித்தராமையா அமைச்சரவையில் மின்துறை அமைச்சராக இருப்பவர் சிவகுமார். இவர் நேற்று ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான பெல்லரி சென்றுள்ளார். அமைச்சருக்கு அங்கிருந்து ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். அப்போது அங்கிருந்த ஆதரவாளர் ஒருவர் தனது கைப்பேசியை எடுத்து அமைச்சருடன் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். இதனைக்கண்ட அமைச்சர் அவரின் கையைத் தட்டி விட்டார். இதில் அந்த நபரின் கைப்பேசி கீழே விழுந்தது. மேலும் அமைச்சர் தள்ளிவிட்டதில் அந்த நபர் நிலை தடுமாறினார். இந்தக்காட்சி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அமைச்சர் இது போன்று நடப்பது இதுவொன்றும் முதல்முறையல்ல கடந்த ஆண்டு ஒரு கல்லூரி விழாவுக்கு சென்றிருந்த போது இதே போன்று செல்ஃபி எடுக்க முயன்ற நபரை அவர் கீழே தள்ளிவிட்டார்.