இந்தியா

கர்நாடகா: சாலை விபத்தில் சிறுத்தை உயிரிழப்பு – போலீசார் விசாரணை

கர்நாடகா: சாலை விபத்தில் சிறுத்தை உயிரிழப்பு – போலீசார் விசாரணை

webteam

கர்நாடகாவில் சாலை விபத்தில் சிறுத்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பெங்களூரு - மைசூர் தேசிய நெடுஞ்சாலை ராம்நகர் அருகே இன்று அதிகாலை சிறுத்தை ஒன்று விபத்தில் சிக்கி உயிரிழந்தது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுத்தையை பரிசோதனை செய்து பின்னர் அடக்கம் செய்தனர். இதையடுத்து விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.