இந்தியா

மூவர்ணத்தில் மிளிரும் கேஆர்எஸ் அணை மதகுகள் - சுற்றுலா பயணிகள் பரவசம்

kaleelrahman

கேஆர்எஸ் அணையின் 15 மதகுகளின் வழியாக நீர் வெளியேற்றம் இரவு நேரத்தில் தேசிய கொடியின் மூவர்ண மின்விளக்குகளால் மிளிரும் காட்சி பார்ப்பவர்களை பரவசமடையச் செய்துள்ளது.

கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக அங்குள்ள பிரதான நீர் நிலைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்நிலையில் நீர் வரத்தும் தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால் இரண்டு அணைகளில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றம் மொத்தமாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த நிலையில் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை (கேஆர்எஸ் அணை) அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் 15 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சுமார் 106 அடி நீளமுள்ள அணையின் மதகுகள் இரவு நேரத்தில் நமது தேசியக் கொடியின் மூவர்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு; மிளிரும் ஒளியுடன் ஆர்ப்பரித்து மதகுகளில் இருந்து வெளியேறும் நீரின் காட்சியை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.