இந்தியா

கர்நாடகா: இந்தி தேசிய மொழி எனக் கூறிய கேஎஃப்சி ஊழியர் - வலுக்கும் எதிர்ப்பு

Veeramani

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கேஎஃப்சி விற்பனை மையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என கூறியதற்கு கண்டனங்கள் வலுக்கிறது.

பெங்களூருவில் உள்ள கேஎஃப்சி விற்பனை மையத்தில் இந்தி பாடல் ஒன்று ஒலிபரப்பப் பட்டதாக தெரிகிறது. அப்போது அங்கிருந்த பெண்  வாடிக்கையாளர் ஒருவர் கன்னட பாடலை ஒலிபரப்புமாறு கேட்டதாக கூறப்படுகிறது. அதனை ஏற்க மறுத்த அந்த உணவகத்தின் ஊழியர் ஒருவர், இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று அந்த பெண்ணிடம் பதிலளித்துள்ளார். அப்போது இரு தரப்பினரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த உரையாடலில் வீடியோ வெளியான நிலையில், கன்னட மக்கள் தங்களது கண்டன குரல்களை ஒலிக்கத் தொடங்கியுள்ளனர். #boycotKFC, #Rejectkfc ஆகிய ஹேஷ்டேக்கும் தற்போது டிரெண்டிங்க் ஆகி வருகின்றன. அண்மையில் சொமோட்டோவின் வாடிக்கையாளர் சேவை மைய முகவர் ஒருவர், அனைவரும் இந்தி கற்றுக் கொள்ள வேண்டும் என தமிழ்நாட்டை சேர்ந்த வாடிக்கையாளரிடம் கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது கர்நாடகாவிலும் அது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதற்கு விளக்கமளித்துள்ள கேஎஃப்சி, சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவது பழைய காணொலி என்றும் கேஎஃப்சியானது, அனைத்து கலாசாரத்தின் மீதும் உயரிய மரியாதையை கொண்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.