ஐஜி ரூபா pt desk
இந்தியா

கர்நாடகா | நீதிமன்ற உத்தரவை அடுத்து ஐஜி-யாக இருந்த ரூபா கூடுதல் டிஜிபி-யாக பதவி உயர்வு

கர்நாடகாவில் ஐ.ஜி-யாக இருந்த ஐ.பி.எஸ் அதிகாரி ரூபாவுக்கு, கூடுதல் டி.ஜி.பி-யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றுபவர் ரூபா (49). இவர், தற்போது, கர்நாடக அரசின் பட்டு சந்தைப்படுத்துதல் கழக நிர்வாக இயக்குநராக ஐ.ஜி தரவரிசையில் இருந்தார். முன்னதாக ஐ.ஏ.எஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரியுடன் ஏற்பட்ட மோதலால், மாநில அரசு தனக்கு பதவி உயர்வு வழங்கவில்லை என்றும், பதவி உயர்வு வழங்க உத்தரவிடக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரூபா மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, இரண்டு மாதங்களுக்குள் ரூபாவுக்கு பதவி உயர்வு வழங்குவது பற்றி, அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 25ம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில், ரூபாவை, கூடுதல் டி.ஜி.பி-யாக பதவி உயர்வு செய்து அரசு உத்தரவிட்டது. அடுத்த உத்தரவு வரும் வரை, தற்போது உள்ள பணியில் அவர் தொடருவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.