பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட திருநங்கைகளுக்கு இரு பெயர்களுடன் பிறப்பு சான்றிதழ் வழங்கும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் 34 வயதில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட திருநங்கை ஒருவர், தனது புதிய பெயரில் திருத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழ் கேட்டு மங்களூரு மாநகராட்சி பிறப்பு இறப்பு பதிவாளரிடம் விண்ணப்பித்திருந்தார். சட்டத்தில் அதற்கு இடமில்லை என்று கூறி அந்த விண்ணப்பம் நிராரிக்கப்பட்டதால், அந்த திருநங்கை கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடினார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, அவருக்கு பாலினம் திருத்தப்பட்டதற்கான சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார். அந்த சான்றிதழில் திருநங்கையின் முந்தைய பெயர், திருத்தப்பட்ட பெயர், பாலினம் போன்ற விவரங்களையும் குறிப்பிட வேண்டும் என்று கூறியதுடன், உத்தரவிட்ட நீதிமன்றம், எல்லா திருநங்கைகளும் இத்தகைய சான்றிதழ்களைப் பெறும் வகையில் சட்டத்தில் உரிய திருத்தம் செய்யவும் உத்தரவிட்டனர்.