இந்தியா

ஹிஜாப் விவகாரம்: கர்நாடக உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் என்னென்ன?

ஹிஜாப் விவகாரம்: கர்நாடக உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் என்னென்ன?

கலிலுல்லா

கர்நாடகாவில் கல்வி நிலையங்களை திறக்க அம்மாநில உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. விரிவான உத்தரவு வரும் வரை எந்த ஒரு மாணவரும் எந்த மத அடையாளங்களையும் கல்வி நிலையங்களுக்குள் அணிந்து வர வேண்டாம் என கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதை எதிர்த்து மாணவர்கள் காவி துண்டு அணிந்ததால் ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது. 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்த போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஹிஜாப் அணிவது என்பது ஒருவருடைய மத உரிமை சார்ந்த விஷயம் இது அரசியல் சாசனம் வழங்கி இருக்கக்கூடிய அடிப்படை உரிமை என்ற வாதங்களை முன்வைத்தனர்.

அதே நேரத்தில் கல்வி நிலையங்களுக்குள் பாகுபாடு ஏற்படுத்தும் வகையில் மத அடையாளங்களை அணிந்து வர அனுமதிக்கக் கூடாது என கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் கல்வி நிலையங்களை திறந்து கொள்ளலாம் என்றும் ஆனால் வழக்கின் விசாரணை நிறைவடையும் வரை எந்த ஒரு மாணவரும் மதம் சார்ந்த அடையாளங்களை அணிந்து செல்ல அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.