சாலை விபத்து  முகநூல்
இந்தியா

கர்நாடகா | காரும் பைக்கும் நேருக்கு நேர் மோதிய விபத்து – 4 பேர் உயிரிழப்பு

பெங்களூரு - சென்னை இடையே அமைக்கப்பட்டு வரும் புதிய சாலையில் ஏற்பட்ட விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

PT WEB

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

பெங்களூரின் ஹொஸ்கோட்டில் இருந்து தமிழகத்தின் ஸ்ரீ பெரும்புதூருக்கு எக்ஸ்பிரஸ் வே அமைக்கப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் ஹொஸ்கோட் முதல் தங்கவயல் பெமல்நகர் வரை பணிகள் முடிந்துவிட்டன. இந்த சாலை திறப்பிற்கு முன்பே, வாகனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், பெங்களுாரில் இருந்து தங்கவயல் நோக்கி வேகமாக சென்ற கார் எதிர்திசையில் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

Death

இதுகுறித்து தகவல் அறிந்த பங்கார்பேட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். பைக்கில் பயணம் செய்தவர் உயிரிழந்த நிலையில், காருக்குள் இருந்தவர்களை மீட்க முயன்றனர். அப்போது குழந்தை உட்பட 3 பேர் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து டிரைவர் உட்பட நான்கு பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பைக்கில் வந்தவர் பங்கார்பேட்டை தொட்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநாத் என்பதும், காரில் வந்த மகேஷ், உத்விதா, ரத்னம்மா ஆகியோர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.