கர்நாடக தேர்தல் களத்தின் கட்சிகள்
கர்நாடக தேர்தல் களத்தின் கட்சிகள் File image
இந்தியா

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவுக்கு பிறகான கருத்து கணிப்புகள் சொல்வதென்ன?

PT WEB

கர்நாடக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. இந்நிலையில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிறகு தனியார் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகளை இங்கு காண்போம்!

* ரிபப்ளிக் டி.வி. கருத்துக்கணிப்பில் பாரதிய ஜனதா 85 முதல் 100 இடங்களை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் 94 முதல் 108 இடங்களை பிடிக்கும் என்றும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 24 முதல் 32 இடங்களை பிடிக்க வாய்ப்பிருப்பதாகவும், பிற கட்சிகள் 2 முதல் 6 இடங்களை வெல்ல வாய்ப்பிருப்பதாக ரிபப்ளிக் டி.வி கணித்துள்ளது.

* இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் பாரதிய ஜனதா 62 முதல் 80 தொகுதிகளை வெல்லும் என்றும் காங்கிரஸ் கட்சி 122 முதல் 140 வரை வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 முதல் 25 தொகுதிகள் வரையும் பிற கட்சிகள் 3 தொகுதிகள் வரையும் வெல்ல வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

பாஜக, காங்., ஜனதா தளம்

* டிவி 9 வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாரதிய ஜனதா 88 முதல் 98, காங்கிரஸ் 99 முதல் 109, மதச்சார்பற்ற ஜனதா தளம் 21 முதல் 26 தொகுதிகளை வெல்லக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சி ஓட்டர்ஸ் கணிப்பில், பாரதிய ஜனதா 83 முதல் 95, காங்கிரஸ் 100 முதல் 112, மதச்சார்பற்ற ஜனதா தளம் 21 முதல் 29 பிற கட்சிகள் 2 முதல் 6 தொகுதிகளை வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஏசியா நெட் கணிப்பில், பாரதிய ஜனதா 94 முதல் 117, காங்கிரஸ் 91 முதல் 106, மதச்சார்பற்ற ஜனதா தளம் 14 முதல் 24, பிறகட்சிகள் 2 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

* ZEE matrics கருத்துக்கணிப்பில், பாரதிய ஜனதா 79 முதல் 94, காங்கிரஸ் 103 முதல் 118, மதச்சார்பற்ற ஜனதா தளம் 25 முதல் 33 பிற கட்சிகள் 2 தொகுதிகள் வரை வெற்றி பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக கணித்துள்ளது.

* டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பை பொறுத்தவரை பாரதிய ஜனதா 114 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 86 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 21 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 3 தொகுதிகளிலும் வெல்லக்கூடிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Election

இப்படியாக கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பிறகு தனியார் ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலும் காங்கிரஸ் அதிக இடங்களை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் 113 தொகுதிகளில் வெற்றிபெறும் கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிந்து கர்நாடக சாமானியரின் தீர்ப்பு தெரியவரும்வரை இறுதி முடிவுக்கு நாமும் காத்திருப்போம்!