இந்தியா

ஜனநாயக கடமையை ஆற்றிய கிரிக்கெட் ஜாம்பவான்கள்

ஜனநாயக கடமையை ஆற்றிய கிரிக்கெட் ஜாம்பவான்கள்

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே ஆகியோர் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தனர். 

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா, தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய 3 முக்கிய கட்சிகள் போட்டியிடுவதால் மும்முனைப்போட்டி ஏற்பட்டு உள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில், 222 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

இந்நிலையில் இந்திய இளையோர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான டிராவிட், பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார். இதேபோல் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளேவும் கர்நாடக தேர்தலில் தனது ஜனநாயக கடைமையை ஆற்றினார். தேர்தலில் வாக்களித்தது தொடர்பான புகைப்படத்தினை கும்ப்ளே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதேபோல் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், கனகபுரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.