இந்தியா

மதானி பரோல் செலவு: பணிந்தது கர்நாடகா

webteam

உச்சநீதிமன்ற கண்டனத்தை அடுத்து, மதானியின் பரோல் செலவை ரூ. 1.18 லட்சமாக கர்நாடக அரசு குறைத்துக்கொண்டது.

கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரான அப்துல் நாசர் மதானி (51), 2008 ம் ஆண்டில் நடந்த பெங்களூரு தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 9 ஆம் தேதி அவரது மகனுக்கு கேரளாவில் திருமணம் நடக்கிறது. இதில் பங்கேற்க, 13 நாள் பரோலில் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. ஆனால் அந்த 13 நாளுக்கும் அவருக்கு வழங்கப்படும் போலீஸ் பாதுகாப்புக்கான செலவை மதானியே ஏற்க வேண்டும் என்றும் அதற்கு மொத்த செலவாக ரூ.14.8 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கர்நாடக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து மதானி மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த உச்சநீதிமன்றம், பரோல் செலவுக்கு ரூ.14.8 லட்சம் கேட்ட கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து மதானி பரோலில் செல்ல ரூ.1.18 லட்சம் போதுமானது என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா நேற்று தெரிவித்தது. இதை கட்டுவதாக மதானியின் வழக்கறிஞர் ஏற்றுக்கொண்டார்.