இந்தியா

தேங்கிய நீரை அகற்ற மண்வெட்டியுடன் களமிறங்கிய காவலர் - வைரலாகும் வீடியோ

தேங்கிய நீரை அகற்ற மண்வெட்டியுடன் களமிறங்கிய காவலர் - வைரலாகும் வீடியோ

webteam

சாலையில் தேங்கி இருந்த மழை நீரை அகற்றுவதற்காக காவலர் ஒருவர் செய்த செயல் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது. 

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மழை பெய்ததால் சாலையில் மழை நீர் தேங்கியுள்ளது. அங்கு இருக்கும் பிரதான சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து சற்று பாதிப்பு அடைந்துள்ளது. இந்நிலையில் அங்கு இருக்கும் ஒரு சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற காவலர் ஒருவர் எடுத்த முயற்சி பெரும் பாராட்டை பெற்று வருகிறது. 

இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில்,சாலையில் தேங்கி உள்ள நீரை அகற்ற போக்குவரத்து காவலர் ஒருவர் மண்வெட்டியால் முயற்சி செய்யும் வகையில் காட்சிகள் பதிவாகியுள்ளது. சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த முயற்சியை அவர் செய்துள்ளார். அவரின் இந்தச் செயலை பலர் பாராட்டி வருகின்றனர். 

போக்குவரத்து காவலர் ஒருவர் மழை நீரை அகற்ற தனி ஆளாக முயற்சி செய்தது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இந்தச் செயல் மூலம் அந்தச் சாலையில் இருந்த மழை நீர் மெதுவாக வடிய தொடங்கியது. இதற்காக இந்தக் காவலருக்கு பெங்களூரு நகர காவல்துறை ஆணையர் பாஸ்கர் ராவ் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.